Srilanka Government

எதிர்கால திட்டங்கள்

செயற்படும் வேகத்தை மணிக்கு 80 கி.மீ. இருந்து மணிக்கு 100 கி. மீ. ஆக அதிகரித்தல்.

கருத்திட்டம் கருத்திட்டப் பிரதேசம் காலப்பகுதி குறிப்புகள்
கரையோரப் புகையிரதபாதையை புனர் நிர்மாணம் செய்தல் கொழும்பிலிருந்து மாத்தறை 159 கி.மீ. 2 வருடங்கள் இந்த நிர்மாணத்தின் முதற்கட்டமான காலியிலிருந்து மாத்தறை வரையான பாதை (45 கி.மீ) மணிக்கு 100 கி. மீ. வேகவடிவமைப்புகள் ஏற்கனவே பூர்த்தியடைந்துவிட்டது.
வடக்கு புகையிரத பாதையை புனர் நிர்மாணம் செய்தல ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை 170 கி.மீ. 3 வருடங்கள் மணிக்கு 120 கி.மீ. வேகவடிவமைப்புடனான பாதையானது 2 கருத்திட்டங்களாக ஓமந்தையிலிருந்து பளை மற்றும் பளையிலிருந்து காங்கேசன் துறை என நிர்மாணிக்கப்படும். ஒப்பந்தமானது இந்திய IRCON இன்டர்நேஷனலிடம் வழங்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் புகையிரத பாதையை புனர் நிர்மாணம் செய்தல். மதவாச்சியிலிருந்து தலைமன்னார் 101 கி.மீ. 2 வருடங்கள் மணிக்கு 120 கி.மீ. வடிவமைப்பு வேகத்தைக் கொண்ட பாதையானது மதவாச்சியிலிருந்து மடு மற்றும் மடுவிலிருந்து தலைமன்னார் துறை என இரு கருத்திட்டங்களாக அமைக்கப்படும். துறையின் நிர்மாணிப்பும் இதில் உள்ளடக்கப்படுகின்றது. ஒப்பந்தமானது இந்திய IRCON இன்டர்நேஷனலிடம் வழங்கப்பட்டுள்ளது.
உருக்கு பாலங்களை மாற்றுதல் 8 தொடக்கம்10 புதிய உருக்குப்பாலங்கள் 2 வருடங்கள் பெல்ஜியத்தின் நிதியுதவியுடன் 8 தொடக்கம் 10 பழைய பாலங்கள் புதிய உருக்கு பாலங்களாக மாற்றப்படும்

 

புதிய புகையிரதப் பாதைகளை அமைத்தல்

கருத்திட்டம் கருத்திட்டப் பிரதேசம் காலப்பகுதி குறிப்புகள்
மாத்தறையிலிருந்து கதிர்காமத்துக்கு புகையிரதப் பாதை அமைத்தல் முதலாம் கட்டம் மாத்தறையிலிருந்து பெலிஅத்த 35 கி.மீ. 3 வருடங்கள் மணித்தியாலத்திற்கு 120 கி.மீ. வடிவமைப்பு வேகத்தை கொண்ட பாதைகள் இரண்டு கருத்திட்டங்களாக மாத்தறையிலிருந்து பெலிஅத்தைக்கும் பொலிஅத்தையில் இருந்து கதிர்காமத்துக்கும் நிர்மாணிக்கப்படும்.
தெற்கு புகையிரதச் சுற்றுவட்டத்தை அமைத்தல் பெலிஅத்தையிலிருந்து ஹம்பாந்தோட்டை 79 கி.மீ 3 வருடங்கள் மணித்தியாலத்திற்கு 120 கி.மீ. வடிவமைப்பு வேகத்தை கொண்ட பாதையானது பெல்அத்தையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு சூரியவெவ ஊடாக அமைக்கப்படும். இக்கருத்திட்டமானது தற்போது வடிவமைப்புக் கட்டத்தில் உள்ளது.
குருநாகலில் இருந்து ஹபரனைக்கு புகையிரதப் பாதை அமைத்ததல குருநாகலில் இருந்து ஹபரன 81 கி.மீ. மணித்தியாலத்திற்கு 120 கி.மீ. வடிவமைப்பு வேகத்தை கொண்ட பாதையானது அமைக்கப்படும். சாத்தியவள ஆய்வானது தற்போது பூர்த்தியடைந்துள்ளது.

உருளும் இருப்பிலுள்ள வாகனத்தொகுதியை அதிகரித்தல்

கருத்திட்டம் கருத்திட்டப் பிரதேசம் காலப்பகுதி குறிப்புகள்
இந்தியாவிலிருந்து டீசல் பல்அலகுகளைக் கொள்வனவு செய்தல். 20 டீசல் பல்அலகுகள் 2 வருடங்கள் கரையோரப் புகையிரதப் பாதையில் பயன்படுத்தவென இந்தியாவில் இருந்து 20 டீசல் பல்அலகுகள் கொள்வனவு செய்யப்படும். இப்பல் அலகுத் தொகுதிகள் 2011 இல் வழங்கப்படும்.
சீனாவிலிருந்து டீசல் பல்அலகுகளைக் கொள்வனவு செய்தல் 13 டீசல் பல்அலகுகள் 2 வருடங்கள் கரையோரப் பாதையில் பயன்படுத்தவென சீனாவில் இருந்து 13 டீசல் பல் அலகுககள் கொள்வனவு செய்யப்படும். இவை 2012 இல் விநியோகிக்கப்படும்.
இந்தியாவிலிருந்து புகையிரத இயந்திரங்களை கொள்வனவு செய்தல் 03 புகையிரத இயந்திரங்கள் 1 வருடங்கள் தெற்கு புகையிரதப் பாதை நிர்மாணக் கருத்திட்டத்திற்கு என இரண்டு புகையிரத இயந்திரங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இவைகள் ஆரம்பத்தில் பாதை அமைப்பு வேலைக்கு பயன்படுத்தப்படும்.
சீனாவிலிருந்து விசேட பயணங்களுக்கான புகையிரதத் தொகுதிகளைக் கொள்வனவு செய்தல் 02 புகையிரத தொகுதிகள் 2 வருடங்கள் விசேட பயணங்களுக்கு வசதிப்படுத்தும் இரண்டு புகையிரதத் தொகுதிகள் 2012 இல் சீனாவில் இருந்து பெற்றுக்  கொள்ளப்படும்.
பாகிஸ்தானிலிருந்து பண்டங்களை ஏற்றும் தாங்கி வண்டிகளைக் கொள்வனவு செய்தல். 24 பண்டங்களை ஏற்றும் தாங்கி வண்டிகள் 1 வருடம் பாகிஸ்தானிலிருந்து எண்ணெய் போக்குவரத்திற்காக 24 தாங்கி வண்டிகள் கொள்வனவு செய்யப்படும்.
இந்தியாவிலிருந்து புகையிரத இயந்திரங்களைக் கொள்வனவு செய்தல். 06 புகையிரத இயந்திரங்கள் 1 வருடம் வடக்கு பாதை நிர்மாணக் கருத்திட்டத்தின் கீழ் இரண்டு புகையிரத இயந்திரங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இவை ஆரம்பத்தில் பாதை அமைப்பு வேலைக்குப் பயன்படுத்தப்படும்.

இந்தியாவிலிருந்து சேவை வண்டிகளை கொள்வனவு செய்தல்

52 சேவை வண்டிகள்      ( BHO ) 1 வருடம்

வடக்குப் பாதை புனர்நிர்மாணக் கருத்திட்டத்தின் கீழ் 52 சேவை வண்டிகள் பெற்றுக்கொள்ளப்படும். இவைகள் ஆரம்பத்தில் பாதை நிர்மாண சேவைக்குப் பயன்படுத்தப்படும்.

சமிக்ஞை அலை கொடுத்தல் மற்றும் தொலைத் தொடர்பினைப் புனர்நிர்மாணம் செய்தல்

கருத்திட்டம் கருத்திட்டப் பிரதேசம் காலப்பகுதி குறிப்புகள்
வடக்கு மற்றும் தலைமன்னார் பாதைகளில் சமிக்ஞை கொடுத்தல் மற்றும் தொலைத் தொடர்பாடல் முறைமையை புனர்நிர்மாணம் செய்தல். அநுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறைக்கும் மற்றும் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் துறைக்குமான 310 கி.மீ. 3 வருடங்கள் Optical Fiber backbone மற்றும் வானொலித் தொடர்பாடலுடன் கூடிய நிற வெளிச்ச மற்றும் சமிக்ஞை கொடுத்தல் தொலைத் தொடர்பு முறைமையை பொருத்துவதை கருத்திட்டம் உள்ளடக்குகின்றது.
மத்திய மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறைமையை மீள மாற்றுதல். மருதானையிலிருந்து வாதுவைக்கான 35 கி.மீ. 1 வருடம் மருதானையிலிருந்து வாதுவை வரையான கரையோரப் பகுதிகளில் 25 வருடங்கள் பழமைவாய்ந்த CTC முறைமையானது புதிய முறைமை ஒன்றால் மாற்றியமைக்கப்படும்.

பிரதான பாதையில் சமிக்ஞை கொடுத்தல் மற்றும் தொலைத் தொடர்பாடல் முறைமையை புனர்நிர்மாணம் செய்தல்.

மருதானையிலிருந்து ரம்புக்கனைக்கான 72 கி.மீ 2 வருடங்கள் Optical Fiber backbone மற்றும் வானொலித் தொலைத் தொடர்பாடலுடன் கூடிய தொலைத் தொடர்பு முறைமையை பொருத்துதலும் நிறவெளிச்ச சமிக்ஞைகொடுத்த்ல முறைமை மத்தியமயப்படுத்தப்பட்ட வாகன நெரிசல் கட்டுப்பாட்டு முறைமையை உட்பட 50 பழைமை வாய்ந்ததை மாற்றியமைப்பதையும் கருத்திட்டம் உள்ளடக்குகின்றது.

மின்சார வசதி செய்தல்

கருத்திட்டம் கருத்திட்டப் பிரதேசம் காலப்பகுதி குறிப்புகள்
மின்சார பல் அலகுகள் மற்றும் சமிக்ஞை அளித்தல் என்பனவற்றிற்கு மின்சார வசதி வழங்குவதை இது உள்ளடக்குகின்றது. வெயாங்கொடையிலிருந்து மருதானை, றாகமையிலிருந்து நீர்கொழும்பு மற்றும் மருதானையிலிருந்து களுத்துறை வரையான 120 கி.மீ. 3 வருடங்கள் இக்கருத்திட்டமானது மின்சார வசதியளித்தல் மற்றும் 15 மின் பல் அலகுகளை வழங்குதலை உள்ளடக்குகின்றது.

தகவல் தொழில்நுட்பம்

கருத்திட்டம் கருத்திட்டப் பிரதேசம் காலப்பகுதி குறிப்புகள்
மின்னியல் கொடுப்பனவுகள்

6 கொடுப்பனவு முறைமைகளுக்கு மின்னியல் கொடுப்பனவு வசதி கிடைக்கக் கூடியதாகச் செய்யப்படும்.

01 வருடம் இணையவழி இருக்கை ஒதுக்கீட்டு வசதிக்கான கொடுப்பனவு, விசேட புகையிரதங்களை ஒதுக்குதல், விளம்பரம் செய்தல், படம் எடுத்தல், பொருள் அனுப்புதல் என்பனவற்றுக்கான கொடுப்பனவுகள் மற்றும் விலைமனுக்கோரல் ஆவணங்கள் கொள்வனவு என்பன பிரயோகங்களை விருத்தி செய்வதனால் கிடைக்கக் கூடியதாக செய்யப்படும். ICTA மற்றும் SLR அமுல்படுத்துகைக்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும்.
கையடக்கத் தொலைபேசி மூலம் இருக்கைகளை ஒதுக்குதல். பிரதான பாதைக்கு ஏற்கனவே உள்ள M இருக்ககை ஒதுக்குதல் முறைமையானது ஏனைய பாதைகளுக்கும் விஸ்தரிக்கப்படும். 01 வருடம் கொழும்பு கண்டி நகரங்களுக்க இடையிலான புகையிரதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் தொலைபேசி, இருக்கை இருப்புக்கள் முறைமையானது ஏனைய பாதைகளுக்கும் விஸ்தரிக்கப்படும். SLR மற்றும் Mobitel நிறுவனங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
e-ஓய்வூதிய முறைமை ஓய்வூதியத் திணைக்களத்துடன் இலங்கை புகையிரத சேவையின் e-ஓய்வூதிய முறைமை இணைக்கப்படும். 02 வருடங்கள் SLR   e-ஓய்வூதிய முறைமையுமடன் இணைப்பதற்கான ஒரு மாதிரிக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை புகையிரத சேவை ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதில் ஏற்படும் பெரிய தாமதங்களை இது குறைக்கும்..
புகையிரத வழித்தடம் காணல் மற்றும் செயற்படுத்தல் தகவல் முறைமை

முழு புகையிதரத் தொகுதிக்குமாக GPS/GSM அடிப்படையிலான புகையிரத வழித்தடம் காணல் மற்றும் செயற்படுத்தல் தகவல் முறைமை

02 வருடங்கள் இம்முறைமையானது மருதானை புகையிரத கட்டுப்பாட்டு நிலையத்தில் பொருத்தப்படுவதுடன் புகையிரதத் தொகுதிகளிலும் GPS/GSM/வேகமாணி அலகுகள் பொருத்தப்படும். இம்முறைமையானது புகையிரத  கட்டுப்பாட்டு தொழிற்பாட்டை அனுமதிப்பதுடன் பொதுமக்களுக்கு சரியான புகையிரத செயற்பாட்டுத் தகவல்களையும் வழங்கும். இது ICTA உதவியுடன் செய்யப்படுகின்றது.
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 04:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
முதல்
வரை
பொருள்
ரயில்
நிறை (கி.கி)