Srilanka Government

பயணிகள் சேவை

நகரங்களுக்கிடையிலானது மற்றும் கடுகதி புகையிரதங்கள் (ஆசான ஒதுக்கீட்டு பக்கத்திற்கு இணைப்பு)

 

நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதங்கள் கொழும்பு -கண்டி, கொழும்பு – வவுனியா மற்றும் கொழும்பு – மட்டக்களப்பு போன்ற பிரதான நகரங்களுக்கிடையிலான கடுகதிச் சேவைகளை வழங்குகின்றது. ஒதுக்கப்படாத 2 ஆம் வகுப்பு, ஒதுக்கப்பட்ட 3ஆம் வகுப்பு மற்றும் அவதானிப்பு காட்சியறை ஆசனங்கள் என்பனவற்றையெல்லாம் இவை கொண்டுள்ளன.

முதல் பயணிகள் புகையிரதமானது கொழும்புக்கும் ஏனைய பிரதான வெளிப்புறங்களுக்கும் இடையிலான இணை கடுகதி சேவையை வழங்குகின்றது. ஒரு புகையிரதத் தொகுதியானது ஒதுக்கப்படாத 2 ஆம் வகுப்பு, மற்றும் 3 ஆம் வகுப்பு இருக்கைகளையும் ஒதுக்கப்பட்ட 2 ஆம் வகுப்பு, 3ஆம் வகுப்பு இருக்கைகளையும், ஒதுக்கப்பட்ட 1 ஆம் வகுப்பு அவதானிப்பு அறையையும் ஒதுக்கப்பட்ட 1 ஆம் வகுப்பு உறங்கும் இருக்கையையும் கொண்டுள்ளது, சில புகையிரதப் பாதைகளில் மாத்திரம் ஒதுக்கப்பட்ட முதலாம் வகுப்பு குளிரூட்டி சேவைகள் வழங்கப்படுகின்றன.
.

ஆசன ஒதுக்கல் வசதிகள் கொண்ட புகையிரதங்கள் -

புகையிரத வகை

புகையிரத இலக்கம்

பயணம்

கிடைக்கக்கூடியதாகவுள்ள இருக்கைகளின் வகுப்புகள்

நகரங்களுக்கிடையில் -நாளாந்தம்

1 மற்றும் 2

கொழும்பு - வவுனியா

முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு

நகரங்களுக்கிடையில் - நாளாந்தம்

3 மற்றும் 4

கொழும்பு - வவுனியா

இரண்டாம் வகுப்பு

நகரங்களுக்கிடையில் - நாளாந்தம்

9 மற்றும் 10

கொழும்பு - கண்டி

முதலாம் வகுப்பு ( அவதானிப்பு அறை ) மற்றும் இரண்டாம் வகுப்பு

நகரங்களுக்கிடையில் - நாளாந்தம்

11 மற்றும் 12

கொழும்பு-மட்டக்களப்பு

முதலாம் வகுப்பு ( அவதானிப்பு அறை ) மற்றும் இரண்டாம் வகுப்பு

நகரங்களுக்கிடையில் - நாளாந்தம்

29 மற்றும் 30

கொழும்பு-கண்டி

முதலாம் வகுப்பு ( அவதானிப்பு அறை ) மற்றும் இரண்டாம் வகுப்பு

நகரங்களுக்கிடையில் – வார இறுதிகளில்

7 மற்றும் 8

கொழும்பு - நானுஓயா

முதலாம் வகுப்பு ( அவதானிப்பு அறை ) மற்றும் இரண்டாம் வகுப்பு

-

-

-

-

கடுகதி பகல்நேரப் புகையிரதங்கள்

5 மற்றும் 6

கொழும்பு -பதுளை

முதலாம் வகுப்பு ( அவதானிப்பு அறை )

கடுகதி பகல்நேரப் புகையிரதங்கள்

15 மற்றும் 16

கொழும்பு -பதுளை

முதலாம் வகுப்பு ( அவதானிப்பு அறை )

-

-

-

-

கடுகதி இரவுநேரப் புகையிரதங்கள்

45 மற்றும் 46

கொழும்பு -பதுளை

முதலாம் வகுப்பு (உறங்கு இருக்கை) , இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு உறங்கும் இருக்கைகள்

அரை கடுகதி இரவுநேரப் புகையிரதம்

79 மற்றும் 80

கொழும்பு - மட்டக்களப்பு

முதலாம் வகுப்பு (உறங்கு இருக்கை) இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு உறங்கும் இருக்கைகள்

அரை கடுகதி இரவுநேரப் புகையிரதம்

83 மற்றும் 84

கொழும்பு- திருகோணமலை

முதலாம் வகுப்பு (உறங்கு இருக்கை) இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு உறங்கும் இருக்கைகள்

அரை கடுகதி இரவுநேரப் புகையிரதம்

89 மற்றும் 90

கொழும்பு -வவுனியா

முதலாம் வகுப்பு (உறங்கு இருக்கை) இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு உறங்கும் இருக்கைகள்

ஆசன ஒதுக்கீட்டு முறைகள்இலங்கை புகையிரதம் பின்வரும் ஆசன ஒதுக்கீட்டு முறைகளை வழங்குகின்றது.
1. புகையிரத நிலையத்திற்கு செல்லுதல் – பயணத் தினத்திற்கு 10 நாட்கள் முன்பதாக இருந்து ஆசன ஒதுக்கீடுகளைச் செய்து கொள்ளலாம்..


புகையிரத நிலையம்

தொலைபேசி இலக்கம்

பயணத் தினத்திற்கு 10 நாட்கள் முன்பாக இருந்து வார நாட்களில் திறந்திருக்கு நேரம்

தொடர்பு கொள்ள வேண்டிய ஆள்

கொழும்பு கோட்டை – ஆசன ஒதுக்கீட்டு அலுவலகம்

011-2432908

06.00 இருந்து 12.00 மற்றும் 12.30 to 14.00

புகையிரத நிலைய அதிகாரி – ஆசன ஒதுக்கீட்டு அலுவலகம்

கண்டி

081-2222271

08.00 இருந்து 16.00

புகையிரத நிலைய அதிகாரி

பதுளை

055-2222271

08.00 இருந்து 16.00

புகையிரத நிலைய அதிகாரி

அனுராதபுரம்

025-2222271

08.00 இருந்து 16.00

புகையிரத நிலைய அதிகாரி

வவுனியா

024-2222271

08.00 இருந்து 16.00

புகையிரத நிலைய அதிகாரி

2. மொபிற்றல் அழைப்பு நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு விடுப்பதன் மூலமாக – கொழும்பு கண்டி நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களுக்கு மாத்திரம் பயணத்தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்து ஆசன ஒதுக்கீடுகளைச் செய்து கொள்ளலாம்.
பின்பற்றப்பட வேண்டிய படிநிலைகள் Follow -
1. மொபிற்றல் தொலைபேசியில் 365இலக்கங்களைச் சுழற்றுக.
2. மொபிற்றல் அழைப்பு நிலைய செயற்படுத்துனர் பதிலளிப்பார்.
3. உங்களது தேவைப்பாட்டைக் கொடுத்து ஆசனத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
4. குறுஞ்செய்தி ஊடாக நீங்கள் ஒரு தொடர்பு இலக்கத்தைப் பெறுவீர்கள்.
5. இத்தொடர்பு இலக்கத்தை (கொழும்பு கோட்டை, கம்பஹா, பெரதெனிய அல்லது கண்டி) புகையிரத நிலைய அதிபரிடம் அல்லது ஏதாவது ஒரு மொபிற்றல் பட்டியல் பில் தயாரிக்கும் நிலையத்தில் காட்டவும் அல்லது சொல்லவும்.
6. அப்பொழுது நீங்கள் புகையிரத சிட்டையைப் பெற்றுக்கொள்வீர்கள் ( M-சிட்டை)
7. உங்களது புகையிரதக் கட்டணம் உங்களது மொபிற்றல் பட்டியல் கட்டணத்தில் சேர்க்கப்படும்..
இந்த வசதியானது ஏனைய நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு -


பதவிநிலை

பெயர்

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

வர்த்தக அத்தியட்சகர்

திரு G.W.S.சிசிர குமார

00-94-11-2320109

0094-11-2432128

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

புறநகர சேவைகள்

கொழும்புக்கும் கொழும்பிலிருந்தும் - நாளாந்தம் அலுவலகங்களுக்குப் பயணிப்பவர்களுக்கு கொழும்பு நாளாந்த புகையிரத நிலையமானது நிறுத்தல் மற்றும் அரை கடுகதி சேவையை வழங்குகிறது. 3 ஆம் வகுப்பிற்கு இருக்கை வசதிகள் ஒதுக்கி வைக்கப்படுவதில்லை. 1919  க்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதன் மூலமாக கட்டண விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். (உதாரணம் குறுஞ்செய்தி வரிவடிவ அமைப்பு slrd train கொழும்பு அனுராதபுரம் ) அல்லது ஏதாவது ஒரு புகையிரத நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021 07:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
முதல்
வரை
பொருள்
ரயில்
நிறை (கி.கி)