Srilanka Government

மேலோட்டம்

இலங்கை ரயில்வே ஆனது போக்குவரத்து அமைச்சின் கீழ் தொழிற்படும் அரச திணைக்களமாகும். இது மிகப் பெரும் போக்குவரத்து சேவையை வழங்குவதுடன் இது நாட்டிலுள்ள ஒரேயொரு ரயில்வே நிறுவனமாகவும் உள்ளது. இலங்கை புகையிரதமானது பயணிகளையும் பண்டங்களையும் போக்குவரத்துச் செய்கின்றது. இதன் ஆரம்பத்திலிருந்தே புகையிரதமானது பயணிகளை விட பண்டங்களையே அதிகமாகக் காவிச் செல்கின்றது. ஆனால் இன்று இது பயணிகள் நோக்கியதாக உள்ளது. இலங்கைப் புகையிரத்தில் பயணிகளுக்கான போக்குவரத்து சந்தைப்பங்கானது 6.0 % ஆகவும் பண்டங்களுக்கான போக்குவரத்தானது 0.7 % ஆகவும் உள்ளது.
.
இலங்கையில் புகையிரதச் சேவையானது நாளாந்த வேலைக்குச் செல்லும் வேலையாட்களை தினமும் எடுத்துச் செல்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இலங்கைப் புகையிரமானது அண்ணளவாக 310 புகைவண்டிகளை 45 வெளியூர் புகைவண்டிகளை மற்றும் 12 நகரங்களுக்கிடையிலான புகைவண்டிகளை செயற்படுத்துவதுடன் நாட்டின் நாளாந்தம் 0.29 மில்லியன் பயணிகளுக்கு போக்குவரத்து அளிக்கின்றது.
இலங்கைப் புகையிரத சேவையானது 1,420 புகையிரதப் பாதைகளையும் 175 இழுவை புகைவண்டிகளை 900 புகையிரதப் பெட்டிகளையும் சமிக்ஞை வலைப்பின்னலையும் பேணுகின்றது. தற்போது அதனுடைய வேலைப்படை 14,400 ஆகும்.

இலங்கை புகையிரதமானது புகையிரத பொது முகாமையாளரின் கீழ் தொழிற்படுகிறது. பொது முகாமையாளர் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றார்.
இலங்கைப் புகையிரதமானது பத்து உப திணைக்களங்களாகவும், மூன்று அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உப திணைக்களங்களானவை உப திணைக்கள தலைவர்களால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. அவர்கள் நேரடியாக புகையிரத முகாமையாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். திணைக்களத்தின் முக்கிய ஆட்களின் தொலைபேசி இலக்கங்கள், தொலைநகல் இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் கீழே தரப்படுகின்றன.

நோக்கு

இலங்கையில் மிகச் சிறந்த மக்கள் நாடும் தரைப் போக்குவரத்து வழங்குபவராக எமது பங்காண்மையாளருக்கு அளவு கடந்த பெறுமானம் அளித்தல்.

பணி

பயணிகளுக்கும் பண்டப் போக்குவரத்துக்குமான சிக்கனமானதும் வினைத்திறனானதுமான, பாதுகாப்பான, நம்பத்தகுந்த, நேரம் தப்பாத புகையிரதப் போக்குவரத்தை வழங்குதல்.

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023 04:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது