பொருள் சேவை Frieght Services
பண்டங்கள் மற்றும் பொதிகள்
எல்லாப் புகையிரத நிலையங்களுக்கும் இடையில் பொதிசேவை வழங்கப்படுகிறது. அவசரப் பொதிகள் கடுகதி மற்றும் அரைக்கடுகதி புகையிரதங்களில் சிறிது உயர்வான கட்டணத்தில் அனுப்பப்படுகிறது. இரவில் ஓடும் விரைவான பயணிகள் புகையிரதத்தில் தபால் எடுத்துச் செல்லப்படுகிறது. இச் சேவையானது இலங்கைப் புகையிரத திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படுகிறது, கொழும்புக்கும் பிரதான இடங்களுக்கும் இடையில் ஓடும் சரக்கு புகையிரதங்களைப் பயன்படுத்தி பண்டப் போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது.
பொருட்களை எடுத்துச் செல்லல் (ஆசன ஒதுக்கீட்டு பக்கத்திற்கு இணைப்பு )
கீழே குறிப்பிட்ட செயன்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல போக்குவரத்து சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆசன ஒதுக்கீட்டு பக்கத்தில் கட்டண விபரங்கள் தரப்படுகிறது.
1. படிவங்கள் பக்கத்தில் இருந்து விண்ணப்பபடிவம் 2.10 யை பதிவிறக்கம் செய்க.
2. புகையிரத விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு அனுப்புக.
011-2432128 இலக்கத்திற்கு தொலைநகல் செய்க அல்லது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அலுவலகத்தில் கையளிக்குக. புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு – 10, கிழமை நாட்களில் காலை 9.00 – மாலை 04.00 வரை
3. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருடன் தொலைபேசியில் பேசுக. தொலைபேசி இல. 011-2431909
4. தீர்மானம் உங்களுக்கு அறிவிக்கப்படும்
5. புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு 10 கரும பீடத்தில் கொடுப்பனவைச் செய்ய முடியும்.
பொதிகளை எடுத்துச் செல்லுதல்
கீழ்வரும் செயன்முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
1. எல்லாப் புகையிரத நிலையங்களிலும் பொதிகளை எடுத்துச் செல்லப்படுவதற்கு பொதிகள் காலை 9.00 – மாலை 4.00மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
2. பொருட்களை சேதமடைதல் வீணாதல் தவிர்ப்பதற்காக சரியான முறையில் பொதி செய்யவும்.
3. புகையிரத நிலைய அதிபர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் பொதியைினை உடைத்து காண்பிப்பதற்கு தயாராக இருக்கவும்.
4. பெற்றுக்கொள்பவரின் பெயர் விலாசம் என்பவற்றை இணைக்கவும்.
5. பெற்றுக்கொள்ளும் ஆளின் பெயர், விலாசம், தேசிய அடையாள இலக்கம் என்பவற்றை புகையிர நிலைய அதிபருக்கு கொடுக்கவும்.
6. பொதியைக் கையளிக்கும் ஆளின் அடையாள அட்டையை புகையிரத நிலைய அதிபருக்கு கொடுக்கவும்.
6. வழிப்பட்டியல் உங்களுக்கு தரப்படும். இவ் வழிப்பட்டியலை பொதியை பெறப்படும் ஆளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
7. முடிவிடத்தில் பொதியைச் சேகரித்துக் கொள்வதற்கு பொதியைப் பெற்றுக்கொள்பவர் வழிப்பட்டியலையும், தேசிய அடையாள அட்டையையும் புகையிரத நிலைய அதிபருக்கு கொடுக்க வேண்டும்.
கொடுப்பனவுகள் -
சாதாரண கட்டணங்கள் :
புகையிரத பொதிக் கட்டணம் |
||||||||||||
தூரம் Km |
நிறை கிலோகிராமில் |
50 கிலோவிலும் பாரமான பொதிகளுக்கு 10 கிலோவுக்கான நிறை |
||||||||||
0-1 |
2-5 |
6-10 |
11-15 |
16-20 |
21-25 |
26-30 |
31-35 |
36-40 |
41-45 |
46-50 |
பொதிகள் அனுப்புவதற்கு,
கடுகதிப் புகையிரதங்கள் மற்றும் அரைக்கடுகதி புகையிரதங்கள் - 2 x சாதாரண கட்டணம்
நகரங்களுக்கிடையிலான புகையிரதங்கள் - 3 X சாதாரண கட்டணம்
பொதிகளின் பெறுமதிக்கான மேலதிக கட்டணங்கள்:
- |
பொதியின் பெறுமதி |
சாதாரண கட்டணத்தின் நூற்றுவீதமாக சாதாரண கட்டணம் |
சில விசேட பொருட்களுக்கான கட்டணம் :
- |
சாதாரண புகையிரதங்கள் |
கடுகதிப் புகையிரதங்கள் |
மீன் உரியவர் எடுத்துச் செல்லும்பொழுது |
சாதாரண கட்டணத்தை விட 50% மேலதிகம் |
- |
கடிதங்கள் |
ரூபா. 20.00 |
- |
சிறுதொகைகளாக தளபாடம் |
3 x சாதாரண கட்டணம் |
5 x சாதாரண கட்டணம் |
காற்றுப்புகும் பெட்டிகளில் கோழிக்குஞ்சுகள் |
3 x சாதாரண கட்டணம் |
5 x சாதாரண கட்டணம் |
வேண்டிய பாரம் குறைந்த பண்டங்கள் |
3 x சாதாரண கட்டணம் |
5 x சாதாரண கட்டணம் |
50 கிலோ நிறைக்கு மேற்படாத இயந்திரங்கள் . |
- |
|
இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
- தேசிய அடையாள அட்டை
- மரத்துக்கான போக்குவரத்து அனுமதி மற்றும் தளபாடக் கொள்வனவு பட்டியல்
மேலதிக விபரங்களுக்கு:
பதவிநிலை |
பெயர் |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
வர்த்தக அத்தியட்சகர் |
திரு. G.W.S.சிசிர குமார |
+94-11-2320109 |
+94-11-2320109 |
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் |
மேற்படி செயன்முறையிலிருந்து மாறுபட்டவைகள்:
அனுப்பபடும் வகை குறித்தோ அல்லது பொருட்களைக் கையளிக்கும் ஆள் குறித்தோ ஏதாவது சந்தேகம் இருப்பின் புகையிரத நிலைய அதிபர் அப் பொதியை மறுப்பதற்கு அதிகாரம் உடையவராக இருக்கிறார்.