ஏனைய சேவைகள்
குளிரூட்டப்பட்ட புகையிரத தொகுதிகளையோ அல்லது விசேட புகையிரத தொகுதிகளையோ பயன்படுத்தி பெரிய குழுவினர் விசேட வாடகைக்கு அமர்த்தும் சேவைகளை வழங்குதல். கண்டி, பொலநறுவை, மட்டக்களப்பு, அனுராதபுரம், மிகிந்தலை, திருகோணமலை மற்றும் காலிபயணிகளை சேர்த்துக்கொள்ளும் வசதிகள் கிடைக்கக்கூடியதாக உள்ளது. ஒற்றை, இரட்டை குடும்ப அறைகள் (05 கட்டில்களுடன்) கிடைக்கக்கூடியதாக உள்ளது. தங்குமிட வசதிகள் கிடைக்கக்கூடியதாக உள்ளது. 25 பேர் தங்கக்கூடிய ஓய்வு அறை மிகுந்தலையில் உள்ளது.
தனியார் மற்றும் அரசதுறை ஊழியர்கள், மாணவர்கள், ஒழுங்காக பயணம் செய்யக்கூடியவர்களுக்கு மிகவும் சலுகைக் கட்டணத்தில் புகையிரத பருவகாலச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. அரச ஊழியர்கள் புகையிரத ஆணைச் சீட்டினால்நன்மை அடைகின்றனர். நாட்டின் அனைத்து பிரசைகளும் கூட யாத்திரைக்கு செல்வதற்கு புகையிரத ஆணைச் சீட்டைப் பயன்படுத்தி நன்மையடைகிறார்கள். 3 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் இலவசமாக எடுத்துச் செல்லப்படுவதுடன், 3-12 வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு அரைக்கட்டணமே அறவிடப்படுகிறது. இதைவிட பின்வரும் சேவைகள் இலங்கைப் புகையிரத திணைக்களத்தால் வழங்கப்படுகிறது.