கண்டி/குருநாகலிலிருந்து கொழும்புக்கு கடமைக்காகச் செல்லும் பயணிகளுக்காக புகையிரத சீசன் டிக்கெட் சேவை 2025/12/08 திங்கட்கிழமை முதல் அமுலாகும்.
2025 டிசம்பர் மாதத்திற்காக கண்டி - கொழும்பு மற்றும் குருநாகல் - கொழும்பு இடையில் பயணிப்பதற்காக அரசாங்க மற்றும் தனியார் மாதாந்திர அனுமதிச்சீட்டு (சீசன் டிக்கெட்) பெற்றுள்ள புகையிரத பயணிகளுக்கு, அந்த புகையிரத நிலையங்களிலிருந்து புறப்படும் பின்வரும் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பேருந்துகளில் பயண வசதியை நாளைய தினம் (2025.12.08) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.
காலை - ரம்புக்கனையிலிருந்து புறப்படுதல்: காலை 5:30 மணி, 5:45 மணி மற்றும் 6:00 மணி
மாலை - ரம்புக்கனையை வந்தடைதல்: இரவு 7:45 மணி, 8:15 மணி மற்றும் 9:00 மணி
ஞாயிற்றுக்கிழமை, 07 டிசம்பர் 2025 10:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது









